விஜய்யாக இருப்பது ஈஸியா, கஷ்டமா.. முதல்வன் பாணியில் அர்ஜுன் கேள்விக்கு தளபதி சொன்ன பதில்
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் மிக பிரம்மாண்ட ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
படத்தில் நடித்த நடிகர்கள், படக்குழு என மொத்த பேரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்றனர். மேடையில் நடிகர் அர்ஜுன் பேசும்போது விஜய் கூடியவிரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என கூற ரசிகர்கள் கொண்டாட்டத்தில் அரங்கமே அதிர்ந்திருக்கிறது.

விஜய்யாக இருப்பது கஷ்டமா..
மேலும் விஜய்யிடம் அர்ஜுன் ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார். 'விஜய்யாக இருப்பது ஈஸியா கஷ்டமா?' என அவர் கேட்க, 'வெளியில் இருந்து பார்க்கும்போது கஷ்டம் போல தான் தெரியும். ஆனால் ரொம்ப ஈஸி தான் சார். அதற்க்கு மெயின் காரணம் ரசிகர்கள் தான்' என விஜய் பதில் கூறி இருக்கிறார்.
முதல்வன் மோமெண்ட் ?? pic.twitter.com/6xctE76x7r
— Sonia Arunkumar (@rajakumaari) November 1, 2023