பிக் பாஸ் பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? பெண் யார் பாருங்க
விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் புகழின் உச்சிக்கே செல்வது எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படி பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ்.
அந்த சீசனில் டைட்டில் ஜெயித்த ஆரி உடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் பாலாஜி முருகதாஸ் பிரபலம் ஆனார்.
திருமணம் முடிந்துவிட்டதா?
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனக்கு போன மாதமே திருமணம் முடிந்துவிட்டது என சொல்லி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் பெண் முகம் அதில் தெளிவாக இல்லை.
ஆனால் விசாரித்தபோது அது படத்தின் ஷூட்டிங் புகைப்படம் என தெரிய வந்தது. அதில் அவருடன் திருமண கோலத்தில் இருப்பது நடிகை ஐஸ்வர்யா மேனன் தான்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏப்ரல் 1ம் தேதி இப்படி பாலாஜி முருகதாஸ் திருமண நாடகம் ஆடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
You May Like This Video