பிக்பாஸ் போட்டியாளருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் முடிவடைக்கு வரப்போகிறது. அடுத்த வருடம் அதாவது ஜனவரியில் நிகழ்ச்சியை முடித்துவிடுவார்கள் என தெரிகிறது.
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 70 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேறியிருக்கிறார்.
ரசிகர்கள் இந்த வாரம் தனலட்சுமி வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை, இப்போதும் இவரா வெளியேறினார் சரியான முடிவு இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி
தற்போது என்னவென்றால் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்த ஏடிகேவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே சோர்வாக காணப்படும் ஏடிகே தனது மகனை நினைத்து அழுது புலம்பி வந்தார்.
அவருக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?