அவசரமாக சீரியலை முடிக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் 8ல் நுழையும் ஹீரோயின்
விஜய் டிவியில் அடுத்த மாதம் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் செய்து வருகிறது.
வழக்கம் போல போட்டியாளர்களாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருக்கின்றனர். போட்டியாளர்களை உறுதி செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறதாம்.
முந்தைய 7 சீசன்களாக பிக் பாஸ் தொகுத்து வழங்கிய கமல் விலகிவிட்ட நிலையில், அவருக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
சீரியல் நடிகை
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் செல்லம்மா சீரியல் விரைவில் முடிய இருக்கிறது.
அதன் ஹீரோயின் அன்ஷிதா பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என கூறப்படுகிறது.
அவர் ஏற்கனவே குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்துகொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.