கோலங்கள் தொடரில் தேவயானி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?
நடிகை தேவயானி
90 காலகட்டத்தில் குடும்ப பாங்கான கதைகள் அதிகம் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து டாப் நாயகியாக அப்போது வலம் வந்தார்.
படங்களை தாண்டி அவர் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த ஒரு தொடர் கோலங்கள். திருச்செல்வம் இயக்கத்தில் 1500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிய இந்த தொடரை இப்போதும் மக்கள் கவனத்தில் வைத்துள்ளார்கள்.
அந்த காலகட்டத்தில் உள்ள குடும்ப பெண்களின் நிலையை அப்படியே கூறியதால் மிகப்பெரிய ரீச் பெற்றது.
முதல் தேர்வு
தேவயானிக்கு இந்த தொடர் பெரிய வரவேற்பு கொடுத்தது, இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடிக்க இப்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது.
தேவயானி நடித்த முதல் தொடரான கோலங்கள் தொடரில் முதலில் நடிக்க இருந்ததே நடிகை சௌந்தர்யா தானாம். சீரியலில் நடிக்க இருந்த நேரத்தில் தான் அவர் விமான விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளாராம்.
போலீசாரால் கைது செய்யப்பட்டாரா பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து- ஷாக்கான ரசிகர்கள், போட்டோ இதோ