தனுஷுக்கு பிரபல ஹீரோயினுடன் இரண்டாம் திருமணம்? பாலிவுட்டில் வேகமாக பரவும் தகவல்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் சமீப காலமாக அதிகம் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் கடந்த வருடம் Tere Ishk Mein என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருந்தார்.
மேலும் அவர் பாலிவுட் பிரபலங்களின் பார்ட்டியில் அடிக்கடி கலந்துகொள்ளும் போட்டோ வீடியோக்களும் வைரல் ஆகி வந்தன. அப்போது நடிகை மிருனாள் தாகூர் உடன் அவர் நெருக்கமாக பேசும் வீடியோ வைரல் ஆனதால் அது காதல் கிசுகிசுவாக மாறியது.

திருமணமா?
இந்நிலையில் வரும் பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று தனுஷ் மற்றும் மிருனாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இது பற்றி இரண்டு பேரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
தனுஷ் ஏற்கனவே நடிகர் ரஜினியின் மகன் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிருனாள் தாகூருக்கு அவரை விட 9 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.