தனுஷ் இப்படி ஒரு கதையில் நடிப்பாரா? நடந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
நடிகர் தனுஷ் அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.
சமீபத்தில் தனுஷின் ஹாலிவுட் படமான க்ரே மேன் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. மேலும் அந்த படம் ஓடிடியில் வெளிவர இருக்கிறது என்கிற தகவலும் வெளியானது.

அரசியல் படத்தில் நடிப்பாரா தனுஷ்?
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் லீடர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என கூறி இருக்கிறார். அதில் தமிழ் நடிகர் சூர்யா அல்லது தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
லீடர் படம் மூலமாக தான் ராணா நடிகராக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த கதையின் அடுத்த பாகத்தில் தனுஷ் / சூர்யா நடிப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.