தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படம் டிராப் ஆகிவிட்டதா.. உண்மை இதுதான்
தமிழ் சினிமாவில் 70களில் தொடங்கி தற்போது வரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து யாரும் தொட முடியாத மிகப்பெரிய உயரத்தை தொட்டு இருப்பவர் இளையராஜா.
அவரது வாழ்க்கை கதையை படமாக எடுக்கப்படும் நிலையில் அதில் தனுஷ் நடிப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் படம் தொடங்காததாலும், எந்த அப்டேட்டும் வராத காரணத்தாலும் அந்த படம் டிராப் ஆகிவிட்டது என செய்தி பரவ தொடங்கியது.
புது அப்டேட்
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் படம் டிராப் ஆகவில்லை என படக்குழுவில் ஒருவர் கூறி இருக்கிறார். தற்போது ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடக்கிறது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் படம் டிராப் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.