பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு இப்படியொரு ரசிகர்களா?- சீரியல் குழு செய்யப்போவது என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் இவ்வளவு நல்லவர்கள் யாரும் இருக்க முடியாது என்கிற அளவிற்கு மூர்த்தி குடும்பம் உள்ளது.
முதலில் வீடு, அடுத்து கடை, இப்போது இன்னொரு கடையும் பிரச்சனையில் சிக்கிவிட்டது.
தொடர்ந்து கஷ்டத்தை சந்திக்கும் இவர்கள் இதில் இருந்து எப்படி மீண்டு வருவார்கள் என்பது தெரியவில்லை.
ரசிகர்களின் கமெண்ட்
3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடும் இந்த தொடர் எப்போது முடியும் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக ஒரு பதிவு வெளியாக ரசிகர்கள் பலரும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் சீரியலை முடிங்கள் என கூறும்போதே பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு ஒரு முடிவு எடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதல் வார முடிவில் டாப்பில் இருக்கும் அஜித்தின் துணிவு- இரண்டு படங்களின் தமிழ்நாடு வசூல் விவரம்