இலங்கை செல்கிறார்களா விஜய்யின் கோட் படக்குழு... புதியதாக வந்த தகவல்
விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படம் தயாராகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை, பாண்டிச்சேரி என மாறி மாறி நிறைய இடத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 90% முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் வெளியானது, சமீபத்தில் இந்த படத்தில் விஜய் 2 பாடல்களை பாடியுள்ளதாக சூப்பர் அப்டேட்டும் கொடுத்தார்.
புதிய அப்டேட்
தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் கோட் படக்குழு இலங்கை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் மைதானத்தின் சில காட்சிகளை படமாக்கி அதை திருவனந்தபுரத்தில் எடுத்த காட்சியோடு இணைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பில் விஜய் உள்பட சில முக்கிய நடிகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.