ஹன்சிகா மோத்வானி கணவரை பிரிந்துவிட்டாரா? திருமணம் ஆகி இரண்டே வருடத்தில் என்ன நடந்தது
நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2022ல் அவரது காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தங்களது திருமண வீடியோவை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்து இருந்தார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் தோழியின் முன்னாள் கணவர் தான் சோஹைல் என்பதால் அந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி நடிகையை அதிகம் ட்ரோல் செய்தனர்.
பிரிந்து வாழ்கிறார்களா?
இந்நிலையில் திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஹன்சிகா தற்போது அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
ஹன்சிகா கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது அவரது அம்மா உடன் தான் வசித்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இது உண்மையா என்பதை ஹன்சிகா விளக்கம் கொடுக்க வேண்டும்.

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
