குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சியில் சிம்புவை அடுத்து இவரும் வருகிறாரா?- செம, யாரு பாருங்க
சமையல் அது கூடவே காமெடி என்கிற கான்செப்டில் உருவான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனுக்கே செம ரீச், அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது.
ஒன்றை விட இரண்டாவது சீசன் மக்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். கடந்த சில மாதங்களாக கொண்டாட்டமாக நிகழ்ச்சி இருந்தது தற்போது முடிவுக்கும் வந்துவிட்டது.
இறுதி நிகழ்ச்சியின் புரொமோக்கள் வந்துவிட்டன, அதைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஸ்பெஷல் விருந்தினராக நடிகர் சிம்பு பங்குபெற்றிருந்தார்.
அவர் நிகழ்ச்சி முழுவதும் வரப்போகிறார் என தெரிகிறது. அவர் புரொமோக்களிலேயே போட்டியாளர்களுடன் சேர்ந்து செம கலாட்டா செய்கிறார்.
இப்போது என்ன மற்றொரு ஸ்பெஷல் தகவல் என்றால் கடந்த சில வாரங்களாக எல்லோரையும் Enjoy Enjaami என்ற பாடலுக்கு நடனம் ஆட வைக்கும் பாடகி தீ குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சியில் வந்திருக்கிறார் என தெரிகிறது.
காரணம் தர்ஷா மற்றும் ரித்திகாவுடன் குக் வித் கோமாளி 2 செட்டில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.