பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் வைரலான செய்தி
பிக்பாஸ் ஜுலி
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி.
அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜுலி மக்களின் வெறுப்பை தான் பெரிய அளவில் பெற்றார்.
அதன்பிறகு ஜுலி பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்மேல் இருந்த மக்களின் பார்வையை மாற்றினார்.
புதிய காதல்
ஏற்கெனவே தனது நெருங்கிய நண்பர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்ட ஜுலி இப்போது பிரபல நடிகர், நடிகையின் மகனை காதலிப்பதாக வைரலாக தகவல் பரவுகின்றன. அதுவேறு யாரும் இல்லை ரியாஸ்கான் மற்றும் உமாரியாஸ் மகனான ஷாரிக்கை தான் ஜுலி காதலிப்பதாக செய்தி வருகின்றன.
தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஜுலி ஷாரிக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் கொஞ்சம் உறுதியாக பேசி வருகிறார்கள்.
நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
