பிக் பாஸ் வைல்டு கார்டு என்ட்ரியாக வரும் விஜய் டிவி காமெடியன்.. எதிர்பார்க்காத ஒருவர்
விஜய் டிவியின் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில், இந்த வார இறுதியில் வைல்டு கார்டு என்ட்ரியாக ஐந்து புதிய பேர் வர இருப்பதாக கமல் அறிவித்து இருக்கிறார்.
அந்த ஐந்து போட்டியாளர்கள் யார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

KPY பாலா
விஜய் டிவியில் காமெடியில் கலக்கிவரும் KPY பாலா தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் பிக் பாஸ் 7க்கு போட்டியாளராக வர இருக்கிறார் என தற்போது தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அது இந்த வார இறுதியில் தான் உறுதியாகும்.
பாலா பிக் பாஸ் செல்ல வேண்டாம் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri