யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லட்சுமி மேனன்?
தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் லட்சுமி மேனன்.
செகண்ட் இன்னிங்ஸ்
அஜித்தின் வேதாளம் படத்தில் தங்கையாக நடித்த அவர் அதற்கு பின் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
தற்போது படிப்பை முடித்துவிட்ட லக்ஷ்மி மேனன் தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி இருக்கிறார். தற்போது சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் அவர் தற்போது அதில் நடித்து வருகிறார்.

யோகி பாபுவுக்கு ஜோடியா?
நடிகர் யோகி பாபுவுடன் சேர்ந்து மலை என்ற படத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகி இருந்தது. அதில் அவர்கள் ஜோடியாக நடிக்கிறார்களா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் இயக்குனர் லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து மலை கிராமத்திற்கு மருத்துவராக வரும் பெண்ணாக நடிக்கிறார் என்றும் யோகி பாபு உடன் அவர் ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.