ரஜினியுடன் அவரது மனைவி லதா இந்த படங்களில் நடித்துள்ளாரா?- அட இது எத்தனை பேருக்கு தெரியும்
நடிகர் ரஜினி இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார். இவர் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக இந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
படம் முதல் நாள் முடிவிலேயே ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
தற்போது ரஜினி மற்றும் லதா ரஜினி பற்றி ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்ன விஷயம் என்றால் ரஜினியை பேட்டி எடுக்க வந்து பின் அவர் மீது காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டவர் லதா.
திருமணத்திற்கு பின் குழந்தைகளை கவனித்து வந்த லதா, தனது கணவருடன் சில படங்களில் நடித்துள்ளாராம்.
இருவரும் சரிதா என்ற படத்திலும் சிவகுமார் நடித்த அக்னி நட்சத்திரம் படத்திலும் சேர்ந்து நடித்துள்ளார்களாம். அப்பட புகைப்படங்கள் சில வெளியாக ரசிகர்கள் அட இருவரும் ஒன்றாக நடித்துள்ளார்களா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.