தளபதி 68ல் இணையும் இளம் கவர்ச்சி நடிகை? உண்மை இதுதான்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு தளபதி68 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சென்னை, தாய்லாந்து ஆகிய இடங்களை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் தளபதி 68 ஷூட்டிங் நடந்து வருகிறதாம்.
வதந்தி
இந்த படத்தில் பிரபல நடிகை மாளவிகா ஷர்மா இணைத்து இருப்பதாக தகவல் சமீபத்தில் பரவியது. அவர் தெலுங்கில் சில படங்கள் மற்றும் தமிழில் சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
தளபதி 68ல் இணைந்து இருப்பதாக ட்விட்டரில் மாளவிகா ஷர்மா என்ற பெயரில் இருக்கும் கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதனால் அவர் விஜய் உடன் நடிக்கிறார் என செய்தி பரவியது.
ஆனால் உண்மையில் அது போலி ட்விட்டர் கணக்கு என்றும், மாளவிகா ஷர்மா விஜய் படத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல் வந்திருக்கிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
