கதைக்கள பேச்சு வார்த்தையில் அஜித்தின் மங்காத்தா 2, ஆனால்... என்ன விஷயம்?
மங்காத்தா
ஒரு நடிகருக்கு முதல் படம், 25, 50, 100வது படங்கள் எல்லாம் மிகவும் ஸ்பெஷல்.
அப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு 50 மற்றும் 100வது படங்கள் எல்லாம் செம ஸ்பெஷலாக அமைந்துள்ளது. அந்த வகையில் 50வது படமாக அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மங்காத்தா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுசன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வில்லனாக அஜித் மிரட்டியெடுத்த இப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை கடந்துவிட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிய மங்காத்தா படத்தில், அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மங்காத்தா 2
முதல் பாகம் படு வெற்றியடைய இப்போது எல்லோரின் ஒரே கேள்வி மங்காத்தா 2 எப்போது வரும் தான். அதற்கு வெங்கட் பிரபு பல பேட்டிகளில் பதில் அளித்துவிட்டார், அஜித் இப்போது கூட ஓகே என்றால் படம் எடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
தற்போது என்ன தகவல் என்றால், அஜித்தின் மங்காத்தா 2 படம் பற்றிய பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அஜித் சம்பளம் போன்ற விஷயங்களால் இப்போதைக்கு படம் தயாராக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
ஆனால் வருங்காலத்தில் மங்காத்தா 2 கண்டிப்பாக வருமாம்.