தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்னே இந்த நாட்டில் மாஸ்டர் படம் வெளியாகிறதா, கடுப்பான ரசிகர்கள்..!
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வரும் ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்றது, அதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியளவில் மிக பிரம்மாண்டமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது, மேலும் பிற நாட்டிலும் பல இடங்களில் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் அமெரிக்கா நாட்டில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதியே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான தமிழ் ரசிகர்கள் நாம் அனைவர்க்கும் முன்னே மாஸ்டர் திரைப்படத்தை அவர்கள் காண உள்ளதாக இணையத்தில் சொல்லி வருகின்றனர்.