மாஸ்டர் திரைப்படம் இந்த நாட்டில் மட்டும் தான் முதலில் வெளியாகிறதா..! எங்கே தெரியுமா..?
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் செய்து வருகிறது.
மேலும் நேற்று இப்படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் இதன் ஸ்பெஷல் ஷோக்கள் மூலம் நள்ளிரவில் வெளியாகவுள்ளது.
அதுமட்டுமின்றி துபாயில் தான் மாஸ்டர் திரைப்படம் முதலில் வெளியாகிறதாம், ஆம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு அங்கு வெளியாகவுள்ளது.
இதனால் மாஸ்டர் படத்தின் முதல் விமர்சனம் அங்கிருந்து தான் வரும் என தெரியவந்துள்ளது.