பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ஷோ நடத்தப்பட்டு வருகிறது.
தமிழில் தற்போது 6ம் சீசன் ஒளிபரப்பாகும் நிலையில், ஹிந்தியில் 16ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சல்மான் கான் தான் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.
மியா கலிஃபா
உலகப்புகழ் பெற்ற ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தற்போது பிக் பாஸ் செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஹிந்தி பிக் பாஸில் சன்னி லியோன் ஒருமுறை போட்டியாளராக வந்தார், அவரைப்போல மியா கலிஃபாவும் பிக் பாஸ் வந்தால் அவரது மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக மாறிவிடும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இருப்பினும் மியா கலிஃபா பிக் பாஸ் வர வாய்ப்பில்லை. ஏனென்றால் பல வருட்ங்களுக்கு முன்பே இப்படி ஒரு செய்தி வந்த நிலையில் அவர் இது வதந்தி என விளக்கம் அளித்து இருக்கிறார். 'நான் எப்போதும் இந்தியாவில் கால் எடுத்து வைக்கமாட்டேன். நான் பிக் பாஸ் வர ஆர்வம் காட்டியதாக சொன்னவர்களை வேலையை விட்டு தூக்குங்க' என கோபமாக அவர் கூறி இருக்கிறார்.