பார்ட்டியில் அந்த பிரபலத்துடன் கைகோர்த்து சென்ற நடிகை மிருணாள் தாகூர்.. இருவரும் காதலிக்கிறார்களா
மிருணாள் தாகூர்
சீதா ராமம் எனும் ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இதன்பின் தற்போது நாணி நடிப்பில் உருவாகி வரும் Hi நாணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்சி வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் தான் Made in Heaven 2 எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். மேலும் ஹிந்தியில் உருவாகி வரும் Pooja Meri Jaan மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
மிருணாள் தாகூர் காதலிக்கிறாரா
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் தீபாவளி பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டிக்கு சென்ற நடிகை மிருணாள் தாகூர், அங்கு பிரபல பாடகர் Badshah என்பவருடன் கைகோர்த்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலிக்கிறார்கள் என்று வதந்தியை பரப்ப துவங்கிவிட்டனர். ஆனால், பாடகர் Badshah இது வெறும் வந்ததி தான் என கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனாலும் கூட இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.