ரஜினி நடித்த முத்து படம் இந்த மலையாள படத்தின் ரீமேக்கா?- இது எத்தனை பேருக்கு தெரியும்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து.
தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படம் Silver Jubilee ஹிட், ரஜினிக்கும் தமிழ்நாடு மாநில விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது.
இப்படம் ஜப்பான் மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓட அங்கு அதிகம் வசூலிக்கப்பட்ட தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.
படத்தின் கதையே செம ஹிட் என்றாலும் பாடல்களும் அதற்கு ஈடாத மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.
இப்போதும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் இப்படம் Thenmavin Kombath என்ற மலையாள படத்தின் ரீமேக்காம்.
இப்படத்தின் ஒன் லைன் குறித்து ரஜினி, கே.எஸ். ரவிக்குமாரிடம் கூற அவர் மலையாள படத்தை பார்க்காமல் தமிழ் மக்களுக்கான ரசனையில் படத்தின் கதையை அமைத்திருக்கிறாராம்.