விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா இந்த நடிகையை டேட்டிங் செய்கிறாரா? ரகசிய சந்திப்பு

By Parthiban.A Jun 20, 2022 02:40 PM GMT
Report

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் ஒன்றாக இருந்த நிலையில் கடந்த வருடம் விவகாரத்தை அறிவித்து ஷாக் கொடுத்தனர். அவர்கள் இடையே கருத்து வேறுபாடு வர என்ன காரணம் என தற்போது வரை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் பிசியாகி விட்டார். பல படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நாக சைதன்யா பற்றி ஒரு நியூஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவர் ஷோபிதா தூளிபாலா என்ற இளம் நடிகையை கடந்த சில வாரங்களாக டேட்டிங் செய்து வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா இந்த நடிகையை டேட்டிங் செய்கிறாரா? ரகசிய சந்திப்பு | Is Naga Chaitanya Dating Sobhita Dhulipala

ரகசிய சந்திப்பு

சமீபத்தில் ரிலீஸ் ஆன மேஜர் என்ற படத்தில் அந்த நடிகை நடித்து இருந்த நிலையில், அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தபோது நாக சைதன்யாவையும் அடிக்கடி சந்தித்துவிட்டு சென்றிருக்கிறார்.

மேலும் நாக சைதன்யா தற்போது ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஒரு வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் அவர்கள் ஒன்றாக வந்ததாகவும், அதிக நேரம் அங்கு பேசிவிட்டு அவர்கள் ஒரே காரில் கிளம்பி சென்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாக சைதன்யா - ஷோபிதா இருவரும் டேட்டிங் செய்வதாக செய்தி காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில் இருவருமே அந்த செய்தியை மறுத்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US