பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனா வில்லி வேடத்தில் இப்படியொரு படம் நடித்துள்ளாரா?- ஆச்சரியப்படும் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கும் தொடர். இடையில் கண்ணன் கதாபாத்திரத்தின் திருமணத்திற்கு பின் சீரியலுக்கான விறுவிறுப்பு அதிகமாக ரசிகர்கள் அதிகம் பார்க்க தொடங்கிவிட்டனர்.
சீரியலில் அண்ணன்-தம்பிகளின் தாயார் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அடுத்த காட்சிகள் இதனை சார்ந்தே வரப்போகிறது.
இந்த நிலையில் தான் சீரியலில் மீனா வேடத்தில் நடிக்கும் நடிகை ஹேமாவை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.
இவர் சில சீரியல்கள் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரியும், ஒரு படத்தில் வில்லியாகவே இவர் நடித்துள்ளாராம்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ஆறாது சினம் படத்தில் கல்லூரியில் படிக்கும் 5 மாணவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருக்கிறார்.
இந்த விஷயம் இப்போது வைரலாக கேள்விப்பட்ட ரசிகர்கள் நம்ம மீனாவா என ஆச்சரியமாக படத்தில் அவரை தேடுகின்றனர்.