தமிழ் சினிமாவில் இன்னொரு காந்தாரா இந்த பரோல்! ஒரு பார்வை
வேற்று மொழிகள் படங்களின் வெற்றி தாக்கம் சமீபத்தில் தமிழ் சினிமாவில் உயர்ந்து வருகிறது. அந்த அளவுக்கு மேக்கிங்கும் கதையம்சம் தரத்திலும் வளர்ந்து வருகிறது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான காந்தாரா படத்தை சொல்லலாம்.
அதற்கு இணையாக மேக்கிங் மற்றும் கதையம்சம் கொண்டு விதத்திலும் இந்த வாரம் திரையரங்கில் தமிழகம் முழுவதும் வெளியான பரோல் திரைப்படமும் சற்றும் சளைத்தது அல்ல. வடசென்னை வாழ்வியலை மையப்படுத்தி அதில் ஒரு தாயின் வலியை, அண்ணன் தம்பி பாசம் வழியாக பல திருப்பங்களுடன் நிறைந்துள்ள படம் இது.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று இந்த வருடத்தில் மிக முக்கியமான படவரிசையில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. வடசென்னை வாழ்வியிலை சொல்லும் போது சில யதார்த்த உண்மைகளை கூற வேண்டும் என்பதால் தான் இந்த ஏ சான்றிதழ் தவிர குடும்பத்தோடு பார்க்கும் வகையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் தூவாரக் ராஜா.
Times of india, மாலை மலர் போன்ற முக்கியமான பத்திரிக்கைகளில் பாராட்டி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பரோல் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து உங்கள் கருத்தைகளை பதிவிடுங்கள்.