கங்குவா படத்தில் இந்த பிரபல நடிகர் நடித்துள்ளாரா?.. கேள்விக்கு சூர்யா கொடுத்த பதில்
கங்குவா
பிரம்மாண்டத்தின் உச்சமாக தமிழ் சினிமாவில் தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா.
சிறுத்தை சிவா மற்றும் சூர்யா முதன்முறையாக கூட்டணி அமைத்து எடுத்துள்ள இந்த படம் வரும்ப நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

உலக அளவில் சுமார் 38 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் உள்ளது.
பிரபல நடிகர்
இந்த பிரம்மாண்ட படத்திற்கான புரொமோஷனை மும்பையில் இருந்து படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அங்கே புரொமோஷன் நிகழ்ச்சிகளை முடித்த படக்குழு இப்போது ஆந்திரா பக்கம் சென்றுள்ளனர்.
அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த படத்தில் உங்களது சகோதரர் கார்த்தி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்களா என கேட்டனர்.
அதற்கு அவர், ஏன் சர்ப்ரைசான விஷயங்களை முன்கூட்டியே சொல்ல வேண்டும்?.
ஒருவேளை இந்த திரைப்படத்தில் கார்த்தி நடிக்கலாம் அல்லது வேறு யாராவது ஒரு நடிகர் நடித்திருக்கலாம், பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்துள்ளார்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan