நடிகர் பிரபாஸ் பிரபல ஹிந்தி நடிகையுடன் டேட்டிங்? தீயாக பரவும் தகவல்
நடிகர் பிரபாஸுக்கு தற்போது 42 வயதாகிறது. அவர் எப்போது திருமணம் செய்ய போகிறார் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் ஒரே கேள்வி.
திருமணம் எப்போது?
பிரபாஸ் குடும்பத்தினரும் அதற்காக முயற்சிகள் செய்து வருவதாக கடந்த பல வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
அது மட்டுமின்றி பிரபாஸ் பற்றி காதல் கிசுகிசுக்களை அதிகம் வருகிறது. பாகுபலி படத்தில் அவரது ஜோடியாக நடித்த அனுஷ்கா ஷெட்டியை அவர் காதலிப்பதாக தான் அப்போது இருந்தே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது நட்பு மட்டும் தான் என தற்போது வரை பிரபாஸ் பேட்டிகளில் கூறி வருகிறார்.

க்ரிதி சனோன் உடன் டேட்டிங்?
தற்போது பிரபாஸ் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஓம் ராவத் இயக்கி வரும் அந்த வரலாற்று படத்தில் க்ரித்தி சனோன் தான் பிரபாஸுக்கு ஜோடி. தற்போது அவருடன் தான் பிரபாஸ் டேட்டிங் செல்கிறார் என தகவல் பரவி வருகிறது.
சமீபத்தி காபி வித் கரண் ஷோவில் இருந்து க்ரித்தி சனோன் பிரபாஸுக்கு போன் செய்ய அவர் உடனே எடுத்து பேசி இருக்கிறார். க்ரித்தி சனோன் உடன் பிரபாஸ் நெருக்கமாக பழகி வருவதை தான் இது காட்டுகிறது, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை மெதுவாக தான் முன்னெடுப்பார்கள் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

மஹாலக்ஷ்மி அதை எடுத்துட்டு வரலனா மாமியார் கொடுமை தான்: ஒரே வாரத்தில் மாறிய ரவீந்தர்
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri