மலையாள சினிமாவின் கிங்காக இருக்கும் மோகன்லால் மகன் இப்படியொரு வேலையை செய்கிறாரா?
மோகன்லால்
மலையாள சினிமாவின் கிங்காக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
The Complete Actor என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக கொடுத்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.
இவர் திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும், பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.
நடிகரின் மனைவி
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மோகன்லாலின் மனைவி சுசித்ரா கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அவர் தனது மகன் விவசாய பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள விவசாய பண்ணையில் வேலை பார்த்து வருகிறாராம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பளம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறாராம்.
அந்த பயணம் முடிந்ததும், அங்கு நடந்த அனுபவங்களை என்னிடத்தில் பகிர்ந்து கொள்வார். ஆண்டுக்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அவர் 2 ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறார் என பேசியுள்ளார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
