கார்த்திக்கை தொடர்ந்து செம்பருத்தி சீரியலின் இந்த முக்கிய நாயகியும் விலகுகிறாரா?- வெளிவந்த தகவல், ரசிகர்கள் ஷாக்
சீரியல் மக்களின் மனதில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு கதை மிகவும் நன்றாக இருக்க வேண்டும்.
இப்போது உள்ள சீரியல்கள் இடையில் இடையில் தான் மக்களிடம் நிறைய ரீச் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தால் சீரியலின் புரொமோ அவர்களது கண்ணில் பட்டால் பார்க்கிறார்கள்.
TRPயில் பெரிய சாதனை செய்ய எல்லா சீரியல் குழுவினரும் போராடி தான் வருகிறார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் ஹிட் சீரியலாக இருந்தது ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி.
இதன் முக்கிய நாயகன் மாற்றம் எப்போது நடந்ததோ அப்போதே சீரியல் டல் அடிக்க ஆரம்பித்தது.
தற்போது வந்த ஒரு அதிரடி தகவல் என்னவென்றால் சீரியலின் முக்கிய நாயகியான பிரியா ராமன் செம்பருத்தி சீரியலில் இருந்து விரைவில் விலக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.