அட்லீ - அல்லு அர்ஜுன் படம் பற்றி பரவிய வதந்தி.. உண்மை இதுதானாம்
இயக்குனர் அட்லீ தனது ஆறாவது படத்தை பற்றி இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார். அந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் அவர் கூட்டணி சேர்வதாக கூறப்படுகிறது.
இந்த படம் பற்றிய அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட இருக்கிறது.
ஹீரோயின்
இந்த படத்தின் ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் விசாரித்ததில் அது உண்மை இல்லை என தெரியவந்திருக்கிறது.
அட்லீ இதற்கு முன் சல்மான் கான் உடன் ஒரு படத்தில் பணியாற்ற இருந்தார். அந்த படத்திக்காக தான் பிரியங்கா சோப்ராவை ஹீரோயினாக நடிக்க வைக்க அணுகி இருந்தார்களாம். ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்திற்கு ஹீரோயினாக ஜான்வி கபூர் தான் நடிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.
