தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல சீரியல் நடிகை? பரவும் ஷாக்கிங் தகவல்
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.
அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன்-மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அவ்வளவு ரசிகர்கள் அந்த சீரியலுக்கு பிறகு ரச்சிதா என்ற அவரது பெயரை மறந்து மீனாட்சி என்றே அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாற்றி மாற்றி எல்லா மொழிகளிலும் நடிக்கிறார். இவர் தமிழில் நடித்த முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2015ம் ஆண்டு இவர்களது திருமணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இப்போது என்ன தகவல் என்றால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுகிறார்கள் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இப்படியொரு ஷாக்கிங் தகவல் பரவி கொண்டிருக்கும் நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி இது எதுவும் உண்மையில்லை, இது வெறும் வதந்தி தான் என்று தெரியவந்துள்ளது.
நடிகை ரக்ஷிதாவே இந்த விஷயத்தை குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில், இதனை நம்ப வேண்டாம்.