விஜய் டிவியின் முக்கிய சீரியல் முடியப்போகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் ராஜா ராணி 2 முடியப்போகிறதா என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.
ராஜா ராணி 2
ஆரம்பத்தில் இந்த தொடரில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் தான் ஹீரோ - ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்கள். ஆனால் அதன் பிறகு பிரசவத்திற்காக ஆல்யா மானசா வெளியேறிவிட்டார்.
அவரை தொடர்ந்து ரியா என்ற நடிகை தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வில்லை அர்ச்சனா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதில் புது நடிகை அர்ச்சனா குமார் என்பவரை கமிட் ஆகி இருக்கிறார்.
சீரியல் முடிகிறதா
இந்நிலையில் தற்போது ஹீரோவாக நடித்து வரும் சித்துவும் ராஜா ராணியில் இருந்து விரைவில் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது. அவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்து இருப்பதாக தெரிகிறது. அதனால் அவர் விரைவில் சீரியலில் இருந்து விலகிவிடுவாரோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
அது மட்டுமின்றி ராஜா ராணி 2 தொடரையே நிறுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனவும் சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.