கர்ப்பமாகும் ராஜி? மகிழ்ச்சியில் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கர்ப்பமாகும் ராஜி?
ராஜி தனது கணவர் கதிரிடம் மெடிக்கல் ஷாப்புக்கு சென்று pregnancy kit வாங்கி வரும்படி கூறுகிறார். இந்த விஷயம் பழனிக்கு தெரியவர, அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் 'இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்கப்போகிறது, ராஜிக்கும் கதிருக்கும் குழந்தை பிறக்கப்போகிறது' என கூறுகிறார்.

இதை கேட்டு ராஜி குடும்பமும் கதிர் குடும்பமும் மகிழ்ச்சியடைய, இப்போதே நாங்கள் ராஜியை எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறோம் என அவர் அம்மா கூறுகிறார். முறைப்படி வளைகாப்பு எல்லாம் நடத்திவிட்டு கூட்டிகிட்டு போங்க என பாண்டியன் மகிழ்ச்சியாக கூற, 'என்னது வளைக்காப்பா?' என ராஜியும் கதிரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

இவர்களின் அதிர்ச்சிக்கு பின்னால் உள்ள விஷயம் என்ன? ராஜி கர்ப்பமாகவில்லையா? பழனிதான் தவறாக புரிந்துகொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டாரா? என இப்படி பல கேள்விகள் ப்ரோமோவில் உள்ளன. அதற்கான பதிலை வரும் வாரம் எபிசோட்களில் பார்த்து தெரிந்துகொள்வோம்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri