காந்தாரா 2ல் ரஜினியா? ரிஷப் ஷெட்டி கொடுத்த ஹின்ட்டால் தீயாக பரவும் தகவல்
காந்தாரா
கன்னட படமான காந்தாரா தென்னிந்தியா மட்டுமின்றி ஹிந்தியிலும் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் அதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக கூறி இருக்கிறார்.
ஸ்கிரிப்ட் பற்றிய ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது என கூறிய ரிஷப் ஷெட்டி, அந்த படம் prequel ஆக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
ரிஷப் ஷெட்டிக்கு சமீபத்தில் தாதாசாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டது. அவருக்கு Most Promising Actor என விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

காந்தாரா 2ல் ரஜினியா?
காந்தாரா படம் திரைக்கு வந்தபோது ரிஷப் ஷெட்டியை ரஜினி நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் தற்போது காந்தாரா இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிப்பதாக செய்தி பரவி வருகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்டபோது, அவரிடமே 'ரஜினி காந்தாரா 2ல் நடிக்கிறாரா?' என கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் சிரித்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.
அவர் மறுக்கவில்லை என்பதால் தற்போது இந்த செய்தி அதிகம் பரவி வருகிறது.

ஜோடியாக சுற்றும் சித்தார்த் - அதிதி ராவ்! லேட்டஸ்ட் வீடியோ வைரல்