1000 கோடி பட வசூல் இயக்குனருடன் இணைகிறாரா ரஜினிகாந்த்... மாஸா இருக்குமே...
ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான கூலி திரைப்படம் வெளியாகிவிட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான இப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரூ. 400 கோடி வசூலை தாண்டியுள்ளது.
அடுத்த படம்
தற்போது ரஜினி கூட்டணி அமைக்கப்போகும் ஒரு இயக்குனர் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
அதாவது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் வைத்து கல்கி 2898 AD என்ற படத்தை இயக்கி ரூ. 1000 கோடி வசூல் கண்ட நாக் அஷ்வின் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நாக் அஸ்வின், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஒரு கதையின் லைன் கூற, அது ரஜினிக்கு பிடித்து போக முழு கதையுடன் வருமாறு கூறியுள்ளாராம். எல்லாம் ஓகே ஆனால் இந்த படத்தை Vyjayanthi Movies நிறுவனம் தயாரிப்பார்கள் என்கின்றனர்.