RCB அணியை வாங்கும் நடிகர் ரன்பீர் கபூர்? எத்தனை கோடி? பரவும் லேட்டஸ்ட் தகவல்
ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் இருப்பவர் ரன்பீர் கபூர். அவரது அனிமல் படம் 2023ல் மிகப்பெரிய வசூலை சாதனையை படைத்தது. அடுத்து அவர் ராமாயனா படத்தில் நடித்து வருகிறார். அந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆலியா இருவரும் இணைந்து 250 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமாக புது வீட்டை கட்டி இருக்கின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க தற்போது ரன்பீர் பற்றி மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

RCB
பெங்களூர் ஐபிஎல் டீம் RCB அணியை விற்பனை செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதில் 8% பங்கை ரன்பீர் கபூர் வாங்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது.
அதற்காக அவர் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய இருப்பதாகவும் பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. 2% பங்கிற்கு 350 கோடி ரூபாய் தொகை, மேலும் 6 சதவீத பங்கு sweat equity ஆக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ரன்பீர் தரப்பு இதுவரை எந்த தகவலையும் இது பற்றி உறுதி செய்யவில்லை.
