வாரிசு நடிகரை காதலிக்கிறாரா நடிகை ரிது வர்மா.. யார் அந்த நடிகர்
வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரிது வர்மா. இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தார்.
இதன்பின் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரமாண்டமாக வெளிவர காத்திருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு நடிகருடன் ரிது வர்மா காதலா
இந்நிலையில் நடிகை ரிது வர்மா, நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த வைஷ்ணவ் தேஜை காதலிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடக்கவிருப்பதற்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன் திருமண ஜோடிக்கு விருந்து வைத்துள்ளார்.
உண்மை இதுதான்
இந்த நிகழ்வில் சிரஞ்சீவி குடும்பத்துடன் நடிகை ரிது வர்மாவும் கலந்துகொண்டுள்ளனர். அதன்பின் தான் வைஷ்ணவ் தேஜ் மற்றும் ரிது வர்மா காதலிக்கிறார் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் வைஷ்ணவ தேஜ் இதுகுறித்து பேசியுள்ளார். இதில் 'அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் திருமண பெண் லாவண்யாவின் தோழியாக தான் ரிது வர்மா கலந்துகொண்டார். அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. மற்றபடி நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று வெளியான தகவல் அனைத்தும் உண்மை இல்லை' என வெளிப்படையாக கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.