ராபர்ட் மற்றும் ரச்சிதா இருவருக்கும் ஒரே கட்டிலில் படுக்கையா?- பிக்பாஸ் 6ல் என்ன நடக்கிறது?
ராபர்ட்-ரச்சிதா
பிக்பாஸ் எந்த சீசன் எடுத்தாலும் அதில் காதல் ஜோடி என்று இருப்பார்கள். தமிழில் ஓடும் பிக்பாஸ் இல்லை எந்த மொழி பிக்பாஸ் எடுத்தாலும் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி வந்துவிடுவார்கள்.
அப்படி இந்த 6வது பிக்பாஸ் சீசனில் காதல் ஜோடியாக மாறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள், ஆனால் இன்னும் யாரும் இணையவில்லை.
இடையில் ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீது தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார்.
புதிய டாஸ்க்
இப்போது பிக்பாஸில் அரண்மனை டாஸ்க் நடக்கிறது, குசும்புக்கார பிக்பாஸ் ராபர்ட் மற்றும் ரச்சிதாவை ராஜா-ராணியாக மாற்றியுள்ளார். அரசு குடும்பத்தினர் தூங்குவதற்கு ஒரு கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் ராஜா மற்றும் ராணி உறங்க வேண்டும் என படைத்தலைவன் அசீம் கூறுகிறார்.
இதைக்கேட்டதும் ராபர்ட் முகத்தில் புண்சிரிப்பு வர ரச்சிதாவோ கோபப்பட்டு நான் இதில் படுக்க முடியாது எனக்கு தனி பெட் வேண்டும் என கூறுகிறார்.
சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா?- இதோ புகைப்படம்