விக்ரமின் இந்த படத்தில் ரோபோ ஷங்கர் மனைவி நடித்துள்ளாரா?- இதுவரை நீங்கள் யாரும் பார்த்திராத புகைப்படம்
சினிமாவில் பிரபலமாக சுற்றிவரும் நடிகர்கள் பலருக்கு சின்னத்திரை ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கிறது.
இப்போது தூள் கிளப்பிவரும் பல கலைஞர்கள் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அப்படி சென்றவர்கள் லிஸ்டில் ரோபோ ஷங்கரையும் கூறலாம்.
காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இப்போது சினிமாவிலும் கலக்குகிறார். அவரது மனைவி பிரியங்கா விஜய்யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும் வருகிறார்.
ரோபோ ஷங்கரின் மனைவி இப்படி நிகழ்ச்சிகளை தாண்டி ஒரு படத்தில் சின்ன காட்சியில் வந்துள்ளார். இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?.
ஆம் அவர் விக்ரம் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான தூள் படத்தில் ஒரு சின்ன காட்சியில் வந்துள்ளார்.
தூள் படத்தில் நடிகை லைலா ஐஸ் கிரீம் எப்படி செய்வது என சமையல் நிகழ்ச்சியில் நடித்திருப்பார்.
அந்த காட்சியில் தான் ரோபோ சங்கரின் மனைவி நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்திருப்பார்.