ஜெயம் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானது நடிகை சதா இல்லையா?... இவர்தானாம்..
ஜெயம் படம்
கடந்த 2002ம் ஆண்டு தெலுங்கில் நிதின், சதா, கோபிசந்த் என பலர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயம்.
தேஜா இயக்கத்தில் வெளியான இப்படம் படு மாஸான வெற்றியை பெற்றது. தெலுங்கு நடிகர் நிதின் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாகிய படம் ஜெயம் தான்.

தெலுங்கில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் சதா நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

ஃபஸ்ட் சாய்ஸ்
தற்போது தெலுங்கில் செம ஹிட்டடித்த இப்படத்தில் முதலில் தேர்வான நாயகி குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கு ஜெயம் படத்தில் சதாவுக்கு முன் வேறொரு கதாநாயகி நடிக்க தேர்வாகியுள்ளார். அந்த கதாநாயகி யார் தெரியுமா, அவர் வேறு யாருமில்லை, ராஷ்மி கவுதம் தான். இதனை நிதின் பட விழா ஒன்றில் கூறி இருக்கிறார்.
