400 கோடியில் எடுக்கப்படும் சலார் இந்த படத்தின் ரீமேக்கா? தயாரிப்பாளர் விளக்கம்
கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கி இருக்கும் அடுத்த படம் சலார். அதில் பிரபாஸ், பிரித்விராஜ் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.
ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். சலார் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கதை பற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது.

ரீமேக்கா?
சலார் படம் Ugramm என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் என ஒரு தகவல் பரவி வருகிறது. அது பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
சலார் படத்தின் கதை இரண்டு நண்பர்களை பற்றியது. நண்பர்களாக இருக்கும் இருவர் மிகப்பெரிய எதிரிகளாக மாறினால் என்ன ஆகும் என்பது தான் கதை. Ugramm படத்தின் கதையும் இரண்டு நண்பர்களை பற்றியது தான். ஆனால் சலார் ரீமேக் இல்லை, புது கதை என கூறி இருக்கிறார் அவர்.
