2ம் திருமணத்திற்கு பின் பெயரை மாற்றும் நடிகை சமந்தா? புது பெயர் இதுதான்
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டபின் சமூக வலைத்தளங்களில் அவரது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார்.
அவரை விவாகரத்து செய்தபிறகு Samantha Ruth Prabhu என்று பழையபடி பெயரை மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவரது காதலர் ராஜ் நிடிமோரு என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

பெயரை மாற்றும் சமந்தா
தற்போது சமந்தா Maa Inti Bangaram என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அந்த படத்தின் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
இந்த படத்தில் தனது பெயரை சமந்தா தனது இரண்டாவது கணவர் பெயருடன் சேர்ந்து 'சமந்தா நிடிமோரு' என்று தான் creditsல் பயன்படுத்த இருக்கிறாராம்.
விரைவில் இன்ஸ்டாகிராமிலும் தனது பெயரை மாற்றப்போகிறார் சமந்தா என தகவல் வெளியாகி இருக்கிறது.
