தனது பெயரை திடீரென மாற்றுகிறாரா நடிகை சமந்தா...
சமந்தா
திறமை, கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் பெரிய இடத்தை பிடிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் பிரபலம் தான் நடிகை சமந்தா.
ரூ. 500க்கு வேலை செய்ய ஆரம்பித்து மாடலிங் பின் நடிகையாக வளர்ந்து தமிழை தாண்டி இப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா ரசிகர்களும் அதிகம் கவனிக்கும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தமிழ் பக்கம் அதிகம் வரவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு சமந்தா நடிப்பில் Maa Inti Bangaram என்ற படம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது, அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாற்றம்
சினிமாவில் நடிப்பு, சொந்த தொழில் என பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா தனது வாழ்க்கையிலும் முக்கியமான முடிவு எடுத்திருந்தார்.
அவர் பிரபல இயக்குனர் ராஜ் நிமோடி என்பவரை மறுமணம் செய்துகொண்டார், அந்த புகைப்படங்கள் எல்லாம் செம வைரலானது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது பெயரை மாற்றியிருப்பதாகவும், இனி அவர் நடிக்கும் படங்களில் புதிய பெயர் இடம்பெறும் என கூறப்படுகிறது.

அதாவது தனது கணவரின் பெயரை சேர்த்து சமந்தா நிடிமோரு என அவர் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அடுத்ததாக நடிக்கும் மா இன்டி பங்காரம் என்ற படத்துடைய டைட்டில் கார்டில் புதிய பெயர் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.