பீஸ்ட் படத்தில் சமந்தாவா? இன்ஸ்டா ஸ்டேட்டஸால் பரவும் தகவல்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் தான் கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது. வியூஸ் கணக்கில் இந்த ட்ரைலர் சாதனை படைத்து வருகிறது.
பீஸ்ட்
பீஸ்ட் படத்தில் சென்னையில் இருக்கும் ஒரு மால் தீவிரவாதிகளால் ஹிஜாக் செய்யபடுகிறது. அதை ரா ஏஜென்ட் விஜய் எப்படி முறியடித்து தீவிரவாதிகளை அழிக்கிறார் என்பது தான் கதை.. இது ட்ரைலரை பார்க்கும்போதே தெரியும்.
இதன் ஷூட்டிங் முழுவதும் ஒரு மால் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தில் சமந்தாவா?
தற்போது மால் அருகில் எடுத்த போட்டோவை நடிகை சமந்தா இன்ஸ்டா ஸ்டேட்ஸில் பதிவிட்டு இருந்தது தெரியவந்திருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பு அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார்.
அதனால் சமந்தா பீஸ்ட் படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.