பல வருடங்களுக்கு பிறகு அந்த விஷயத்தை செய்யப்போகிறாரா இயக்குனர் ஷங்கர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

movie shankar ramcharan
By Yathrika Sep 11, 2021 05:08 AM GMT
Report

பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி ரசிகர்களை அசத்துபவர் இயக்குனர் ஷங்கர். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே பெரிய அளவில் பேசப்படும்.

கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் இயக்கிய அவர் சில காரணங்களால் அப்படத்தை அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்.

தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். அப்படத்தின் பூஜையும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ராஜமௌலி என பலர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடந்தது.

தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் இயக்குனர் ஷங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, எந்த அளவிற்கு இது உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்த ஷங்கர் பல வருடங்களுக்கு முன் பூவும் புயலும், வசந்த ராகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US