பிரபல நடிகர் சர்வானந்த், ரக்ஷிதா திருமணம் நிறுத்தப்பட்டதா?- உண்மை என்ன?
நடிகர் சர்வானந்த்
நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சர்வானந்த்.
தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இவருக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவர் 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, ராம் சரண், ஸ்ரீகாந்த், அகில் அக்கினேனி என பலர் கலந்துகொண்டார்கள்.
நிறுத்தப்பட்டதா திருமணம்
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
எனவே இவர்களது திருமணம் நின்றுவிட்டது என சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகிறது.
இதுகுறித்து நடிகரின் தரப்பில், சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா திருமணம் நின்றுவிட்டது என கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. அவர்கள் இருவரும் சந்தோஷமாக தான் உள்ளார்கள்.
அவர் படப்பிடிப்பில் படு பிஸியாக இருப்பதால் தான் திருமண தேதி இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் திருமண தேதி குறித்து அறிவிப்பு வரும் என நடிகரின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெலுங்கு மீடியா பக்கங்களில் கூறப்படுகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்- சோகத்தில் சின்னத்திரை பிரபலங்கள்