ரோபோ ஷங்கருக்கு இரண்டு மகளா? குடும்ப போட்டோக்களில் இருக்கும் பெண் யார் தெரியுமா
நடிகர் ரோபோ ஷங்கரின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நலக்குறைவால் காலமான அவரது உடல் நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டு சென்னை வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ரோபோ ஷங்கருக்கு கமல், உதயநிதி ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட பல சினிமா துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இரண்டாவது மகளா?
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பற்றி எல்லோருக்கும் தெரியும். பிகில் படத்தில் நடித்த அவர் பிரபலம் தான்.
மேலும் ரோபோ ஷங்கர் வீட்டில் இருக்கும் இன்னொரு பெண், ரோபோ ஷங்கரின் இரண்டாவது மகள் என தகவல் பரவி வந்தது. அனைத்து குடும்ப போட்டோக்களிலும் அவரை பார்க்க முடியும்.
ஆனால் உண்மையில் அவர் ரோபோ ஷங்கர் மகள் இல்லையாம், அவரது அண்ணன் சிவராமனின் மகள் இந்து தான் அது. அவர் கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக ரோபோ ஷங்கர் வீட்டில் தான் வாழ்ந்து வருகிறாராம்.


