ரோஜா சீரியலில் சிப்பு சூரியனுக்கு பதில் நடிக்கப்போவது இவரா?- வெளிவந்த சந்தோஷமான தகவல்
சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியல் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு முன்பில் இருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த ரோஜா தொடர் TRPயில் முதல் இடத்தை பிடித்து வந்தது.
இப்போது தான் கொஞ்சம் கதையில் தொடர் சறுக்க பின்வாங்கி வருகிறது. டிஆர்பியில் 4,5 இடங்களுக்கு எல்லாம் ரோஜா தொடர் சென்றுவிட்டது.
இந்த நேரத்தில் தான் தொடர் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்தது.

நாயகனின் திடீர் முடிவு
இந்த ரோஜா தொடரில் ஹீரோவாக நடிக்கும் சிப்பு சூரியன் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக கூற ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சி ஆனார்கள்.
பின் நீங்கள் இல்லையென்றால் தொடர் பார்க்க மாட்டோம், யாரையும் அந்த கதாபாத்திரத்தில் நினைக்க முடியாது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள்.
ரசிகர்களின் பேராதரவை பார்த்த சூரியன் தனது முடிவை மாற்றிக்கொண்டு இனி தானே சூர்யாவாக தொடரில் நடிப்பேன் என கூறியுள்ளார்.
நடிகை மீனாவின் கணவருக்கு அப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu