சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து ஹீரோ அமல்ஜித் வெளியேறிவிட்டாரா?... நடிகர் போட்ட பதிவு...

By Yathrika Nov 26, 2026 04:24 AM GMT
Report

சிங்கப்பெண்ணே

சன் டிவியில் கடந்த 2023ம் ஆண்டு புதுமுக நடிகர்கள் நடிக்க துவங்கப்பட்ட சீரியல் தான் சிங்கப்பெண்ணே.

குடும்பத்தில் பணப் பிரச்சனையால் கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஆனந்தி என்ற பெண் தனது வாழ்க்கையை நடத்த போராடும் கதைக்களமாக இந்த சீரியல் உள்ளது.

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து ஹீரோ அமல்ஜித் வெளியேறிவிட்டாரா?... நடிகர் போட்ட பதிவு... | Is Singapenne Serial Actor Amaljith Quits Serial

இப்போது கதையில் இத்தனை நாள் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ள ஆனந்தி போராடி வந்தார். பல மாதங்களின் போராட்டத்திற்கு பிறகு மகேஷ் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என அறிந்துவிட்டார்.

கதைக்களம்

தற்போது கதையில் தன்னை ஏமாற்றிய மகேஷை நீதிமன்றம் முன் நிறுத்தியே ஆவேன், தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன் என ஆனந்தி சபதம் எடுத்துள்ளார்.

அன்பு வேலைக்காக இப்போது திருப்பூர் சென்றுவிட்டது போல் காட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து ஹீரோ அமல்ஜித் வெளியேறிவிட்டாரா?... நடிகர் போட்ட பதிவு... | Is Singapenne Serial Actor Amaljith Quits Serial

விலகினாரா

இதனால் அன்பு கதாபாத்திரத்தில் நடித்துவந்த அமல்ஜித் சீரியலில் விலகிவிட்டார் என சமூக வலைதளங்களில் பேச்சு வந்துவிட்டது.

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து ஹீரோ அமல்ஜித் வெளியேறிவிட்டாரா?... நடிகர் போட்ட பதிவு... | Is Singapenne Serial Actor Amaljith Quits Serial

இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமல்ஜித் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு செய்துள்ளார். அதாவது யாரும் வருத்தப்பட வேண்டாம், நான் சீரியலில் இருந்து விலகவில்லை.

கண்டிப்பாக சீரியல் கடைசி வரை நான் இருப்பேன் என பதிவு செய்ய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US